கோகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்தவுக்கு கொரோனா தொற்று உறுதி

மேலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதீ துஷ்மந்த மற்றும் நாலக பண்டார கோட்டேகொட ஆகிய இருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டிருந்தார்.

இதற்கமைய, கடந்த நான்கு நாட்களில் மட்டும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் துஷ்மந்த சுகயீனம் அடைந்திருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் துஷ்மந்த தனிமைப்படுத்தலில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருடன் அண்மைய நாட்களில் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

තවත් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් දෙදෙනෙකුට කොවිඩ් -19 වෛරසය ආසාදනය වී ඇති බව වාර්තා වෙයි.

ශ්‍රී ලංකා පොදුජන පෙරමු‍ණේ සාරතී දුෂ්මන්ත සහ නාලක බණ්ඩාර කෝට්ටෙගොඩ යන මන්ත්‍රීවරුන් දෙදෙනාට එලෙස වෛරසය ආසාදනය වී ඇති බව වාර්තා විය.

සාරතී දුෂ්මන්ත මන්ත්‍රීවරයා ඊයේ දිනයේ ද පාර්ලිමේන්තු රැස්වීම සදහා සහභාගී වී තිබුණි.

ඒ අනුව ගතවූ දින 4 තුළ පමණක් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් සිව් දෙනෙකුට කොවිඩ් -19 වෛරසය ආසාදනය වී තිබේ.

අමාත්‍ය සරත් වීරසේකර මහතාට වෛරසය ආසාදනය වී ඇති බවට මීට දින දෙකකට පෙර වාර්තා වූ අතර ශානක්‍යයන් රාසමානික්කම් මහතාට වෛරසය ආසාදනය වී ඇති බවට ඊයේ වාර්තා වුණි.

Two more Members of Parliament were tested positive for Covid-19.

According to reports, SLPP lawmakers Sarathi Dushmantha and Nalaka Bandara Kottegoda have contracted the virus.

MP Dushmantha had also attended the parliamentary session held yesterday.

With the new development, a total of four parliamentarians including Minister of Public Security Rear Admiral (Retd) Sarath Weerasekara and Tamil National Alliance (TNA) MP Shanakiyan Rasamanickam have been tested positive for novel coronavirus just within four days.

Comments are closed.