மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் தெரிவு: நீதிமன்றம் தடை உத்தரவு

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் எச்.பி. சந்தன குமார ஜயவந்தன 2022 ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை உரிய முறையில் சமர்பிக்கத்த தவறியதால் பிரதேச சபையின் தலைவர் பதவியில் இருந்து 2021 டிசம்பர் 31 ஆம் திகதி தாமாகவே பதவி விலகியதாக சபரகமுவ மாகாண சபையின் ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ 2022 ஜனவரி 15 ஆம் திகதி வெளியிட்டுள்ள 2262/49 என்ற இலக்க வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அறிவிப்பு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆளநர் என்ற முறையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளஅதிகாரங்களுக்கு அமைவாக மாவனல்லை பிரதேச சபையின் பதில் தலைவராக கே.ஜீ. பியதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் தெரிவு தொடர்பான வாக்கெடுப்பு நாளை(26) மாவனல்லை பிரதேச சபையில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்க்கு எதிராக மாவனல்லை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எச்.பி. சந்தன குமார ஜயவந்தன குறித்த தலைவர் தெரிவுக்கு தடை உத்தரவு வழங்குமாறு கோரி நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதனை ஏற்ற நீதிமன்றம் மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் தெரிவு தொடர்பில் பெப்ரவரி 3 ஆம் திகதிவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.