மாவனல்லையில் இன்று எரிபொருள் அனுமதி அட்டை பரீட்சிப்பு

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையானது நேற்று கொழும்பில் இரண்டு இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கமைய கேகாலை மாவட்டத்தில் இன்று மாவனல்லை எப்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தல் எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்..

பரீட்சார்த்த நடவடிக்கையின் பின்னர் தேசிய மட்டத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலக்கத் தகடுகளில், 0, 1 மற்றும் 2 ஆகியவற்றை இறுதி இலக்கங்களாக கொண்ட வாகனங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகிகப்படவுள்ளது.

Comments are closed.